’கடாரம் கொண்டான்’ படத்தை வரும் மே மாத இறுதியில் வெளியிட திட்டம்..!!

share on:
Classic

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படம் வரும் மே மாதம் இறுதியில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.  

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இப்போது , விக்ரமை வைத்து ‘கடாரம் கொண்டான்’ படத்தை இயக்கி வருகிறார். ‘பாயிண்ட் பிளாக்’ என்கிற பிரெஞ்ச் படத்தை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

கடாரம் கொண்டான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்போது இந்த படத்தை பற்றியும், ரிலீஸ் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.  கடாரம் கொண்டான் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன்ஸ் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாகவும். படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் போய்கொண்டிருப்பதாகவும் மேலும் இந்த படத்தை மே மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுருக்கிறதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan