'கடாரம் கொண்டான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..!!

share on:
Classic

கடாரம் கொண்டான் படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரெடக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த கடாரம் கொண்டான் படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மே 31ஆம் தேதி சூர்யாவின் என் ஜி கே படம் வெளியாவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan