’கடாரம் கொண்டான்’ படத்தின் முதல் பாடல் மே 1-ஆம் தேதி வெளியாகும் என தகவல்..!!

share on:
Classic

கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ஆம் தேதி வெளியாகும் என ஜிப்ரான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை படியியுள்ளார். 

இந்த நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி இசை சிறப்பாக உருவாகி வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளியாகும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தி அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படம் மே இறுதியில் வெளியாக இருக்கிறது.  

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan