’களவாணி-2’ படத்தின் டிரைலர் வெளியீடு..!!

share on:
Classic

விமல் ஓவியா நடிப்பில் அரசியல் பின்னணியில் உருவாகி வரும் களவாணி 2 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘களவாணி’.  சற்குணம் இயக்கி இருந்த இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் இப்போது  உருவாக்கியுள்ளது.

இதிலும்  விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan