அவசரப்பட்டு எங்கள் கையை அழுக்காக்க விரும்பவில்லை: கூட்டணி குறித்து கமல்ஹாசன் சுளீர்!!!

share on:
Classic

மக்களவை தேர்தலில் யாரிடமும் அவசரப்பட்டு கூட்டணி வைக்க விரும்பவில்லை என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாகத் தெரிவித்தார்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நாங்கள் மக்களுக்கு நல்லதை பரிமாறப்போகும் கை... அதற்காக எங்கள் கையை சுத்தமாக வைத்திருக்கிறோம். அவசரப்பட்டு கை குலுக்கி அழுக்காக விரும்பவில்லை. எனவே, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக கூறினார். பின்னர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த கமல் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் "கறைபடியாத கட்சியை தம்மோடு இணைத்து கொள்ள தயார். அனைவரும் ஒரே இடத்தில இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. சிதறி இருக்க வேண்டாம்" என்று கூறினார். 

News Counter: 
100
Loading...

aravind