முன் ஜாமின் கோரி கமல் மனுதாக்கல்..!

share on:
Classic

கோட்சே குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்குகளுக்கு முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், கோட்சே குறித்த கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி மற்றும் திருப்பூர் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிமன்றம், முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் நாளையே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும், விடுமுறை கால நீதிமன்றத்தில் ரத்து வழக்குகளை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan