பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், வீடியோ வெளியிட்ட கமல்..!

share on:
Classic

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், தமது டிவிட்டர் பக்கத்தில் இறுதிகட்ட பரப்புரை வீடியோவை அவர் வெளியிட்டார்.

4 தொகுதி இடைத்தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அவர் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை தடை விதித்ததால், தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் பிரசார வீடியோவை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள கமல்ஹாசன், அண்ணனை பறிகொடுத்து தவிக்கும் தங்கைகளின் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார். ஏற்கனவே பிரச்சார விளம்பரத்தில் கமல்ஹாசன் டிவி-யை உடைப்பது போன்ற காட்சிகள் சர்ச்சையான நிலையில், இந்த வீடியோவில் கோபத்தால் உடைந்த டிவிக்கு பதிலாக புதிய டிவியை மாற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்து குறித்த அறிக்கை ஒன்றையும் கமல் வெளியிட்டுள்ளார். அதில், 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்ற மதக் குறிப்பு சொல்லப்படவில்லை என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan