'காஞ்சனா 3' படத்தின் ஷேக் யோ பாடி பாடல் வெளியீடு..!!

share on:
Classic

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் ஷேக் யோ பாடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக வெளிவந்த முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது. இதுமட்டுமில்லாமல் குழந்தைகளையும் இந்த படங்கள் கவர்ந்திருந்தது.  முனி, காஞ்சனா, காஞ்சனா 2 படங்களின் தொடர்ச்சியாக இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ படமும்  உருவாகி வருகிறது.  லாரன்ஸ்க்கு ஜோடியாக வேதிகாவும்,  ஓவியாவும் நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

சமீபத்தில் காஞ்சனா 3 படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும்  நிலையில், இந்த படத்தின் ஷேக் யோ பாடி என்ற பாடலின் விடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவங்களோட டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்க இந்த காஞ்சனா 3 படம் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகிறது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan