சுடுகாட்டுக்குச் செல்ல பாதை தடைபட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் தடுப்புச்சுவர் அருகே அடக்கம் செய்த அவலம்

Classic

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள குழிபாந்தாண்டலம் சுடுகாட்டுக்குச் செல்ல பாதை தடைபட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பிணத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அப்பகுதியில் உயிரிழந்த ரோஸ் என்ற பெண்மணியின் உடலை, சுடுகாட்டுக்கு எடுத்து செல்கையில் போலீசார் வழிமறைத்து, அப்பாதை பட்டா போடப்பட்டு விட்டதை விளக்கினர். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் அங்குபோடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் அருகே சடலத்தை அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

sasikanth