புதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்.!

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கேன் வில்லியம்சன்.

12-வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி லீக் ஆட்டங்களில் முதல் 5 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது. ஆனால் கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது. இங்கிலாந்துடன் நடந்த இறுதி லீக் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி கண்டது. 

இந்நிலையில் இன்று இந்தியாவுடனான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கப்டில் 1 ரன்னில் வெளியேற அவரை அடுத்து வில்லியம்சன் களமிறங்கினார். அவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த போட்டியில் அவர் 95 பந்துகளுக்கு 67 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் இந்த உலகக்கோப்பையில் பல ஆட்டங்களில் தனியாக அணியை வெற்றிக்கு எடுத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் 2 சதம், 2 அரை சதம் உட்பட 548 ரன்கள் குவித்துள்ளார். 2015-ஆம் நடைபெற்ற உலகக் கோப்பையில் குப்தில் 547 ரன்கள் அடித்ததே நியூசிலாந்து வீரரின் அதிக பட்ச ரன்னாக இருந்து வந்துள்ளது. 

 

News Counter: 
100
Loading...

Saravanan