புதிய உலக சாதனை படைத்துள்ள கேன் வில்லியம்சன்..!

share on:
Classic

புதிய உலக சாதனை படைத்துள்ள  கேன் வில்லியம்சன்..!

இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையேயான இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மார்ட்டின் குப்டில் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அவரையடுத்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். இவர் பல ஆட்டங்களில் தனி ஒருவனாக போராடி அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்து சென்றுள்ளார். 9 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 2 சதம் 2 அரை சதம் என மொத்தமாக 548 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடந்து வரும் இறுதி போட்டியில் 45 பந்துகளுக்கு  27 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறார். இந்த போட்டியில் அவர் 1 ரன்னை கடந்த போது  உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயவர்தனே (548 ரன்கள், 2007) உள்ளார்.

News Counter: 
100
Loading...

Saravanan