துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!

share on:
Classic

கன்னியாகுமரி அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ். இவர் கோதையார் பகுதியில் அமைந்துள்ள முதல் நிலை மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு அஜின் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் தோல்வி காரணமாக அஜின் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan