சூர்யாவிற்காக கைகோர்க்கும் ரஜினி, ஷங்கர்.....பிரம்மாண்டத்தின் உச்சம்.....!

share on:
Classic

காப்பன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஷங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்

NGK படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் காப்பான் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. காப்பான் படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. காப்பான் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை தயாரிக்கும் லைகா ப்ரோடக்‌ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷங்கர் பணியாற்றியுள்ளதால் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இருவரும் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News Counter: 
100
Loading...

Ramya