கிடங்கு கழக தலைவர் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் MLA நீக்கம் - குமாரசாமி அதிரடி

share on:
Classic

கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ உமேஷ் ஜாதவை கிடங்கு கழக தலைவர் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் குமாரசாமி நீக்கியுள்ளார்.

கர்நாடகாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குமாரசாமியின் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு மைனாரிட்டியாக இருப்பதாக கூறி பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, பாஜகவினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் எதிர்கொள்ள தயார் என்றார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ உமேஷ் ஜாதவை அம்மாநில கிடங்கு கழக தலைவர் பொறுப்பில் இருந்து முதலமைச்சர் குமாரசாமி நீக்கம் செய்துள்ளார். அவருக்கு பதிலாக பிரதாப் கவுடாவுக்கு கிடங்கு கழக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind