கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு

share on:
Classic

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி கர்நாடக சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது 

அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடள்ளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகியோர் பாஜகவினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 7ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மூன்று முறை கொறடா உத்தரவை மீறியதால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, அம்மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் சபாநாயகர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind