நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்..!

share on:
Classic

நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சருக்கு அம்மாநில ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.  

காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது பேரவையில் பேசிய சித்தராமையா, குழப்பமான சூழல் நிலவுவதால் ஒரே நாளில் முடிவெடுப்பது சரியாக இருக்காது என்று கூறினார். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பின்னர் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடாகவில் நிலவும் குழப்பமான சூழலுக்கு யார் காரணம் என்பது அனைவருக்கு தெரியும் என்று பேசினார். இதனையடுத்து ஏற்பட்ட அமளியால் சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். 

மேலும், சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள அம்மாநில ஆளுநர், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ள ஆளுநர், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind