’பேட்ட’.. மகிழ்ச்சியின் மழையில் நனையும் இயக்குனர்..!

Classic

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ’பேட்ட’ திரைப்படம் உலக முழுவதும் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உருவான பேட்ட உலகம் முழுவதும் இன்று வெளியாகி ’அடேங்கப்பா சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் தான்’ என்று சொல்லும் அளவிற்கு அனைவரையும் மகிழ்ச்சியில், குத்தாட்டம் ஆட வைத்துள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் பிரமாண்ட கொண்டாட்டம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  பேட்ட படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு மூழ்கடிக்கும் அளவிற்கு அற்புதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினி, சன் பிக்சர்ஸ்-க்கும், ரஜினி ரசிகர்கள் மற்றும் பேட்ட குழுவினருக்கு தனது நன்றிகளை தெரிவித்த அவர், இப்படத்தின் கதையையோ அல்லது படக் காட்சியையோ தியேட்டர்களில் இருந்து படம் பிடித்து பகிர வேண்டாம் எனவும், நீங்கள் அனுபவித்த ‘ ரஜினிஃபைடு’ஐ அனைவரும் அனுபவிக்கட்டும் எனவும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று பதிவிட்டிருக்கிறார்.

 

News Counter: 
100
Loading...

aravind