பூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்..!!

share on:
Classic

தேவ் படத்தை தொடர்ந்து  கார்த்தி இப்பபோது  'மாநகரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என்ற  படத்தில் நடித்து வருகிறார்.

ஹீரோயின், டூயட் பாடல்கள் இது எதுவும் இல்லாமல்  உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிருக்கும்  நிலையில் கார்த்தியின் அடுத்த படமான கார்த்தி 19 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' படத்தை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய 'கீதா கோவிந்தம்' படத்தில்  ஹீரோயினாக நடித்திருந்தார், இந்த படம் மூலமாக ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாகவிற்கு அறிமுகமாகிறார். விவேக் மெர்வின் இசையில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan