கலவரத்தைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை - கரூர் SP

share on:
Classic

கலவரத்தைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரவகுறிச்சி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 12ம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பேசிய கமல்ஹாசன், கோட்சேவை முதல் இந்து தீவிரவாதி என்று கடுமையாக விமர்சனம் செய்தததை சுட்டிக்காட்டினார். 

இதுகுறித்து பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மதம், இனம், மொழி சம்பந்தமாக வன்முறை தூண்டும் வகையில், பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind