காஷ்மீர் அனந்த்நாக் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து புதிய தகவல்..!!

share on:
Classic

காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த புதன்கிழமை மாலை தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில், சிஆர்பிஎஃப் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு சிஆர்பிஎஃப் வீரர்களும், தகுந்த பதிலடி கொடுத்தனர். அதில் 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர், மேலும் காயமடைந்த 5 வீரர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு அல் - உமர் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் முஷ்தக் அகமது ஸர்கர், அனந்த்நாக் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு ஜெயிஷ் இ அமைப்பு தான் காரணம் என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அல் உமர் அமைப்புக்கு இது போன்ற தாக்குதல் நடத்த தேவையான வசதிகள் இல்லை எனவும், அவர்கள் ஜெயிஷ் இ அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு இந்த கூட்டு சதிக்கு முக்கிய காரணமாக முஷ்டக் அகமது இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய தீவிரவாதிகளில் முஷ்டக் அகமதுவும் ஒருவர் ஆவார். பின்னர் விடுதலையான 3 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya