காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச நாடுகள் உதவவேண்டும் : இம்ரான்கான் கோரிக்கை..!

share on:
Classic

காஷ்மீரில் பிரச்சனை தொடர்பாக சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்திருப்பதைச் சுட்டிக் காட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் மீதும் அங்குள்ள மக்கள் மீதும் இந்தியா அதிக ராணுவத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டதையடுத்து, காஷ்மீரில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது உலக நாடுகளுக்கு தெரிந்து விட்டதாக கூறினார். பாஜக அரசு காஷ்மீரின் சுதந்திரப் போராட்டத்தை இந்திய ராணுவத்தின் மூலம் ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், காஷ்மீரில் பிரச்சனை தொடர்பாக சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan