தழும்பு பிரச்சனையா...? இதோ உங்களுக்கான கற்றாழை மருத்துவம்...!

share on:
Classic

காயத்துக்கு பிறகு நம் உடலில் தோன்றும் ஒருவகையான இழை நார்த்திசுவே தழும்பு ஆகும். தசைகள் பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு திரும்புவதால் தான் தழும்புகள் தோன்றுகின்றன.

பெண்கள் பிரசவத்துக்கு பிறகும், உடல் எடை குறைப்புக்கு பிறகும் தழும்புகள் தோன்றுவது இயற்கையான ஒன்று தான். தழும்புகளை ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் மறையச் செய்யலாம். ஆலீவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகளின் தடத்தை நீக்கி எளிதில் மறையச் செய்யலாம். மேலும் தழும்புகளை வராமல் தடுக்கவும், இருக்கும் தழும்புகளை ஓரளவு மறையச் செய்யவும் உடற்பயிற்சி முக்கியமானதாகும்.

நமது உடலுக்குத் தேவையான தண்ணீரை அதிகமாக குடித்து வந்தால் உடல் வறட்சியினால் ஏற்படும் தழும்புகளிலிருந்து விடுபடலாம். எனவே தண்ணீர் அதிகம் குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். தழும்புகளுக்கு மட்டுமல்லாமல் வெயில் பாதிப்பு, சுருக்கங்கள், வெட்டுக்காயம், புண்கள் தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். சுத்தமான கற்றாழையிலிருந்து அதன் ஜெல்லை எடுத்து தழும்புகளின் மேல் மென்மையாக தடவி வந்தால் பூரண குணமடையும்.

News Counter: 
100
Loading...

aravind