மகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..!

share on:
Classic

நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி  மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கீர்த்திக்கு நடிகையாவதை விட ஃபேஷன் டிசைனராவதில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கீர்த்தியின் கவனம் ஃபேஷன் டிசைனிங் மீது இருந்தபோது அவர் நடிக்க வந்தால் பெரிய ஆளாவார் என்று அவரின் அம்மா மேனகா நினைத்துள்ளார். ஆனால் அதற்கு கீர்த்தியின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு கீர்த்தியின் தந்தையான சுரேஷ் குமாரிடையே பல முறை நடந்த பேச்சிவார்த்தைக்கு பிறகே அவர் மகளை நடிக்க வைக்க சம்மதித்தார். 

2018 ஆம் அண்டில் வெளியான திரைப்படங்களில் விருதுகள் பட்டியல் மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாகாநடி தெலுங்கு திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 66வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் நடிகையர் திலகம். இது தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்விக் இயக்கிய இந்த படத்தில் சாவித்திரியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்தும் இருகிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார். இது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில் இந்த தேசிய எனக்கு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  சாவித்திரி கேரக்டரில் நடிப்பது மிகவும் சவாலாகவே இருந்தது. தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் படக்குழுவினர், அனைவரும் ஒத்துழைப்பு, கொடுத்ததே இந்த விருதை பெற காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்த தேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளேன் என்று நம்புவதாகவும், இனி அடுத்தடுத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த விருது செய்தி அறிவிக்கப்பட்டதுமே, சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, நேரிலும் தொலைபேசி அழைப்புகளிலும் வாழ்த்து குவித்து வருகிறது. மகாநடி படத்திற்கு முன்பு கோலிவுட்டில் தானா சேர்ந்தா கூட்டம், பைரவா, ரெமோ, தொடரி, ரஜினி முருகன், இது என்ன மாயம் போன்ற பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

Saravanan