ஸ்தம்பிக்கும் கேரளா..! கொச்சி விமான நிலையம் மூடல்..!

share on:
Classic

கேரள மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கி வருவதால், அதன்பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.

கேரளா மாநிலத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பெருமளவு சேதம் ஏற்பட்டது. இந்த முறையும் அதேபோல், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதன்படி, கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், வயநாடு போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கவலையடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan