விவசாய நிலத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள்..!

share on:
Classic

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கப்பட்ட மருத்துவக்கழிவுகள் குறித்து விசாரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் அரசூரில் செந்தில்குமார் என்பவர் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து பல வாகனச் சோதனைகளை கடந்து தமிழகத்துக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது. 

மூட்டை மூட்டையாக உள்ள மருத்துவக் கழிவுகளாலும் உடைந்த மருந்துப் பாட்டல்களாலும் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.  மருத்துவக்கழிவுகள் தமிழகத்துக்குள் எப்படி வந்தது என்பது குறித்தும் பதுக்கலுக்கான காரணம் குறித்தும் விசாரிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind