"ஐயப்பன் பெயரை பயன்படுத்தக்கூடாது" கேரள கட்சிகளுக்கு அறிவுறுத்தல்..!

share on:
Classic

தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை ஐயப்பன் பெயரை பயன்படுத்தக் கூடாது என கேரள மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு, கேரளாவில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிகா ராம் மீனா ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்பன் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

News Counter: 
100
Loading...

vinoth