பரபரப்பான சூழலுக்கு இடையே சபரிமலை கோவிலில் இன்று மாலை நடை திறப்பு

share on:
Classic

பரபரப்பான சூழலுக்கு இடையே, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. 

தொடர்ந்து, வரும் 22-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, முதல்முறையாக சபரிமலை நடை திறக்கப்படுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சபரிமலை செல்லும் வழிகளான பந்தளம், நிலக்கல், பம்பை பகுதிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்கள், தங்களின் ஆதார் கார்டில் உள்ள தங்களது வயதை காண்பித்தவாறு கோவிலுக்கு  சென்றனர்.

News Counter: 
100
Loading...

sasikanth