முதல்முறையாக சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள்... வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பு..!!

Classic

பெண்களை சபரி மலைக்குள் செல்ல அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், முதன் முறையாக சபரி மாலைக்குள் நுழைந்த இரு பெண்கள், பலத்த மிரட்டலையடுத்து தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள் 
புகழ்பெற்ற சபரி மலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பெண் உரிமையாளர்கள் போராடி வந்த நிலையில், அதற்கு சரி என்று சமீபத்தில் தான் தலையசைத்தது நீதிமன்றம். மிக முக்கியம் வாய்ந்த இந்த தீர்ப்பையடுத்து, சபரிமலைக்குள் சென்று முதல் பெண்கள் என்று பெருமையை பெற்றனர் கேரளாவை சேர்ந்த பிந்து அம்மினி மற்றும் கனகா துர்கா.   

கடும் எதிர்ப்பு 
இதில் 40 வயதாகும் பிந்து கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். 39 வயதாகும் கனகா பொதுப்பணித்துறையில் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் சபரிமலைக்குள் நுழைந்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஒரு நாள் முழுவதும் பந்த் கடைபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களும் குவிந்து வருகிறது.

திருப்பி அனுப்ப முயற்சி 
"இந்த மிரட்டல்களுக்கு பயந்து எங்களை திருப்பி அனுப்ப போலீசாரும் நண்பர்களும் கூட முயற்சி செய்தனர்" என்று கனகா கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சபரிமலைக்குள் செல்லும் இவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் திரும்பவும் ஜனவரி 2 ஆம் தேதி வெற்றிகரமாக சபரிமலைக்குள் சென்று வந்தனர். இவர்களை அடுத்து மூன்றாவதாக இன்னொரு பெண்ணும் சபரிமலைக்குள் சென்று வந்துள்ளார்.

எங்களுக்கு எந்த பயமும் இல்லை
"எங்களுக்கு எந்த பயமும் இல்லை. எங்களது ஒரே நோக்கம் அந்த புனித ஸ்தலத்திற்குள் செல்ல வேண்டும் என்பது மட்டும் தான்" என்கிறார் பிந்து. கடும் எதிர்ப்புகளால் இப்போது வரை காவல்துறையின் பாதுகாப்பில் உள்ள இருவரும் அடுத்த வாரமாவது வீட்டிற்கு செல்லலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind