நடிகனுக்காக பெட்ரோல் ஊற்றி உயிரை மாய்த்துக்கொண்ட ரசிகர்!

share on:
Classic

நடிகர் யாஷ் தனது பிறந்தநாளை கொண்டாததால் மனமுடைந்த ரசிகர் அவரது வீட்டிற்கு முன் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் யாஷ் : 

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். கன்னட திரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்தவர். கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகி ஒரே நாளில் 18.1 கோடி ருபாய் வசூல் செய்தது கே.ஜி.எப் படம்.
 

Image result for kgf yash

 

நடிகர் யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் : 
 

வெற்றிப்படம் கொடுத்த யாஷ் தனது பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடியிருக்கலாம். ஆனால், அண்மையில் நடிகர் அம்பரீஷ் காலமானதால் யாஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
 

மனமுடைந்த ரசிகர் தற்கொலை : 
 

யாஷ் பிறந்தநாளை கொண்டாடவில்லை என ரசிகர்கள் கவலையும்,ஏமாற்றமும் அடைந்தனர். இதையடுத்து யாஷை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏமாற்றம் அடைந்த ரவி என்ற ரசிகர், யாஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 

ரசிகர் ரவியின் கடைசி வார்த்தை : 

பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் சிகிச்சையின் போது ’ யாஷ் வருவாரா’ ? என்று கேட்டுள்ளார். இதையடுத்து நடிகர் யாஷ் மருத்துவமனைக்கு வந்தபோது பிறந்தநாள் வாழ்த்து கூறிய பின் ரவியின்  உயிர் பிரிந்தது.
 

வேண்டுகோள் : 

ரசிகர்கள் அன்பு வைக்கலாம். ஆனால், தற்கொலை செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. என்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் யாரவது இப்படி செய்தால் நான் இனி வர மாட்டேன் என்று நடிகர் யாஷ் கூறியுள்ளார்.

இரங்கல் : 

மருத்துவமனைக்கு சென்று ரவியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட யாஷிடம், எங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று பெருந்தன்மையுடன் மீளா துயருடன் கூறியுள்ளனர் ரவியின் பெற்றோர். இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என மனவேதனையுடன் நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.
 

 

News Counter: 
100
Loading...

youtube