சச்சின் சாதனையை முறியடித்த கோலி..!

share on:
Classic

சர்வதேச போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரராக சச்சின், மற்றும் கங்குலி திகழ்ந்த நிலையில், அவர்கள் சாதனையை இன்றைய ஆட்டத்தில் சமன் செய்துள்ளார் கோலி.

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்களாக சச்சின் மற்றும் கங்குலி உள்ளனர். கோலி இன்று பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 57 ரன்களை கடந்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக அன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. சச்சின் 275 போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம் சச்சினின் சாதனை முறியறிக்கப்பட்டது. சச்சின், கங்குலிக்கு பிறகு 11 ஆயிரம் ரன் சேர்த்த 3-வது இந்தியர் என்ற சாதனையும், சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையும் கோலி பெற்றுள்ளார்.

News Counter: 
100
Loading...

Saravanan