WC2019 : கோலியின் செயலால் நெகிழ்ந்த ஆஸி அணி..!

share on:
Classic

 நேற்று நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் ஸ்மித்தை கேலி செய்த ரசிகர்களை கோலி கண்டித்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நேற்று ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் விக்கெட் இழப்புக்கு பிறகு கோலி களமிறங்கினார். அப்போது ஆஸிரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் ஃபோர் லைன் அருகே பீல்ட் செய்ய நின்றார். அவரை பார்த்த ரசிகர்கள் சீட்டர் சீட்டர் என கூச்சலிட ஆரம்பித்தனர், இதனை பார்த்த கோலி இது போல செய்யாதீர்கள் கை தட்டி உற்சாகபடுத்துங்கள் என சைகையில் கூறினார். அதை பார்த்த ஸ்மித் உடனே கோலி அருகில் சென்று அவரது முதுகில் தட்டி கொடுத்து விட்டு சென்றார், கோலியின் இந்த செயலால் ஆஸி வீரர்கள் நெகிழ்ந்து போயினர். ரசிகர்கள் சமூக வலைதளம் முழுவதும் இந்த செயலை பகிர்ந்து வருகின்றனர். கடந்த வருடம் ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் தடையில் இருந்து வந்து விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும் . 

News Counter: 
100
Loading...

Saravanan