பொங்கல் பரிசுத்தொகைக்காக கொல்லப்பட்ட மூதாட்டி..!

share on:
Classic

உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுதொகையில் பங்கு தராததால் மனைவியை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியைச் சேர்ந்த  ராமர்  என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி, தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகையான 1000 ரூபாயை நேற்று வாங்கி வந்துள்ளார். அந்த பணத்தில் பங்கு தருமாறு ராமர் தனது மனையிவிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை  ராசாத்தி தர மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமர்கையில் இருந்த அரிவாளால் ராசாத்தியை கழுத்தை அறுத்து கொலை செய்திவிட்டு, போலீசில் சரணடைந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராசாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind