அரசர் பதவியிலிருந்து விலகுவதாக ஜப்பான் அரசர் அறிவிப்பு..!!

share on:
Classic

ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தனது அரசர் பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் அரசராக இருக்கும் 85 வயதான அகிஹிட்டோ தனது வயது மூப்பு காரணமாக அரசர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் ஜப்பான் அரசர் பதவியை துறக்கும் அரசர் இவர்தான். இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அகிஹிட்டோ கூறுகையில் என்னை அவர்களது அடையாளமாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். ஜப்பான் மக்கள் மற்றும் உலகில் பிற நாட்டு மக்களும் அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்க நான் பிராத்திக்கிறேன் என தெரிவித்தார். இவர் அரசர் பதவியின் அறியணையை துறந்ததை தொடர்ந்து அவரது மகனும் இளவரசருமான நருஹிட்டோ புதன் கிழமை பதவி ஏற்க உள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan