இணையதளத்தை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த கிரண் பேடி...

share on:
Classic

புதுச்சேரி செய்தித்துறை அலுவலகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் கிரண் பேடி, இணையதளத்தை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பாடம் எடுத்து அசத்தினார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விளம்பரத்துறையின் இணையதளம் செயல்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரண் பேடி, எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாடம் எடுத்தார். பின்னர், தகுதிவாய்ந்த செய்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கிரண்பேடியிடம் புகாரளித்தனர். இதையடுத்து பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்காக ஊடகக் கொள்கை ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.   

News Counter: 
100
Loading...

aravind