ஹர்திக் பாண்ட்யா,  KL ராகுல் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை..!

share on:
Classic

பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசிய இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது.

தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தனர். பெண்களை தரக்குறைவாக பேசிய இருவரும் 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு தெரிவித்தார். 

ஆனால் கே.எல்.ராகுல் இதுவரை பதில் கூறவில்லை. இது குறித்து விசாரணை நடத்திய பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் வினோத் ராய், இருவருக்கும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளார். இந்தத் தடைக்கு பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind