கொடநாடு கொள்ளை வழக்கு: தீபு, பிஜின் கைது

share on:
Classic

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷயான், மனோஜ், மனோஜ் சாமி, திபு, ஜித்தின்ராய், பிஜின் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 8ம்தேதி நடைபெற்றபோது, ஷயான், மனோஜ் ஆகிய இருவரும் ஆஜராகாததால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும், பிஜின், திபு, ஷயான், மனோஜ் ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில்,  தீபு, பிஜின்குட்டி ஆகியோரை, நீலகிரி போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind