"சச்சினை விட கோலியே சிறந்தவர்"..வாங்கி கட்டிக்கொண்ட ஹார்திக் பாண்டியா..

share on:
Classic

இந்திய கிரிக்கெட்டின் 'கடவுள்' என்றழைக்கப்படும் சச்சினை விட கோலி சிறந்தவர் என்று கூறியதற்காக ஹார்திக் பாண்டியா மற்றும் KL ராகுல், கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

ரசிகர்கள் போர்க்கொடி:

கிரிக்கெட் வீரர்கள் ஒப்பிடப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்திய கிரிக்கெட்டின் 'லெஜெண்ட்'  சச்சின் டெண்டுல்கரோடு, ஐசிசி தரவரிசையின் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை ஒப்பிடுவதை எல்லாம் ஒத்துக்கொள்ளவே முடியாது என்று ரசிகர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.  

வாங்கி கட்டிகொண்ட கிரிக்கெட் வீரர்கள்:

சமீபத்தில் பிரபலமான 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் இந்தியாவின் ஹார்திக்  பாண்டியாவும் KL ராகுலும் கலந்து கொண்டனர். அங்கு பல விஷியங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது சச்சின், விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர் என்ற கடினமான கேள்விக்கு, சற்றும் தயக்கமின்றி இருவரும் கோலி தான் என்றனர். இந்த பதிலை கேட்ட சச்சினின் தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருவரையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட கோலி என்ன சொல்கிறார்:

இந்நிலையில் Breakfast with Champions என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கோலி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் " ஒருவருடன் ஒப்பிடுவதற்கு முதலில் இன்னொருவருக்கு தகுதி வேண்டும். எனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆசை வர காரணமாக இருந்த சச்சினோடு என்னை ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம். அவர் தான் சிறந்த பேட்ஸ்மேன். அவரது திறமைக்கு யாரோடும் ஒப்பிட முடியாதவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார் 

News Counter: 
100
Loading...

aravind