டாப்பில் இருக்கும் கோலி, பும்ரா... முதலிடத்தை பிடிக்குமா இந்தியா..?

share on:
Classic

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலை நேற்று ஐசிசி வெளியிட்டது. இதில் கோலி, பும்ரா முதலிடத்தில் தொடர்கின்றனர்.

தற்போது, இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தும் வாய்ப்பு அதிகம். மேலும், ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய வீரர்கள் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

முதலிடத்தில் பேட்ஸ்மேன் கோலி:

பேட்ஸ்மேன் வரிசையில் 899 புள்ளிகளை பெற்று கோலி முதலிடத்திலும் , ரோஹித்  871 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், 767 புள்ளிகளை பெற்று ஷிகர் தவான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். பின்னர் முதல் 20 இடங்களில் வேறு இந்திய அணியின் வீரர்கள் இடம்பெறவில்லை. அடுத்தபடியாக 674 புள்ளிகளை பெற்று தோனி 21வது இடத்தையும் ,571  புள்ளிகளை பெற்று ரஹானே 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தமாக 9 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 100 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Related image

பும்ரா பந்துவீச்சில் முதலிடம்: 

பந்து வீச்சில் 841 புள்ளிகளை பெற்று பும்ராஹ் முதிலிடத்தை தக்கவைத்துள்ளார்.723 புள்ளிகளுடன் குல்தீப் மூன்றாவது இடத்திலும் 683 புள்ளிகளுடன் சாஹல் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 590 புள்ளிகளை பெற்று புவனேஸ்வர் குமார் 23-வது இடத்தையும் 26-வது இடத்தில் அக்சர் பட்டேலும், 28-வது இடத்தை ஜடேஜா-வும் பிடித்துள்ளனர். 100 பேர் அடங்கிய தரவரிசை  பட்டியலில் 10 இந்திய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதலிடம் பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு:  

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளும், இங்கிலாந்து 126 புள்ளிகளும் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. மே மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலம் இந்தியா முதல் இடத்தை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் ஐந்து  ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வென்றால் அதிக புள்ளிகளை பெறலாம் .

 

Image result for 2019 indian team

 

News Counter: 
100
Loading...

youtube