எதிரணி கேப்டனை அவமதித்தாரா கோலி..? கொதிக்கும் நெட்டிசன்கள்..!

share on:
Classic

டாஸ் போடும்போது 'ஷார்ட்ஸ்' (Shorts) அணிந்திருந்த விராத் கோலியின் செயல், பெரும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய லெவன் அணியுடனான பயிற்சிப்போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில், இந்திய அணி கேப்டன் விராத் கோலி முழங்காலுக்கு மேல் 'ஷார்ட்ஸ்' அணிந்துகொண்டு, 'டாஸ்' (Toss) போடுவதற்காக மைதானத்திற்குள் நுழைந்தார்.

இந்நிலையில், எதிரணி கேப்டன் தொழில்முறையாக உடை அணிந்திருந்ததாகவும், ஆனால் கோலி மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், கோலியின் இந்த செயல் எதிரணி கேப்டனை அவமதிக்கும் விதமாக அமைந்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind