அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம்..!

share on:
Classic

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து அணுமின் நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலையின் முதலாவது மற்றும் 2-வது அலகுகளில் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் மட்டுமே அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும் மற்ற அணு உலை கழிவுகள் அங்கு சேமிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சேமித்து வைக்கப்படும் கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும், அதனை எதிர்காலத்தில் மாற்று விஷயங்களுக்கு உபயோகிக்கலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அணுக்கழிவு மையம் அமைய உள்ளதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர், நிலம், காற்று ஆகியன மாசடைய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan