9-வது நாளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையின் பயணம்..!

share on:
Classic

ஒசூர் அருகே 9-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலையை கொண்டுச்செல்வதில் தாமதம் நீடித்து வருகிறது.

தென்பெண்ணையாற்றில் மண்பால பணிகள் நிறைவடையாததால் கோதண்டராமர் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. வந்தவாசிஅருகே மலைகளில் செதுக்கப்பட்ட 350 டன் கோதண்டராமர் சிலை ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலம் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 6 மாதமாக பல்வேறு இடையூறுகளை கடந்து பேரண்டப்பள்ளிக்கு சிலை வந்துள்ளது. பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஒடும் தெண்பெண்ணை ஆற்றில் கோதண்டராமர் சிலை எடுத்துச்செல்ல தற்காலிக மண்பாலம் அமைக்கப்பட்டது. மழை காரணமாக தற்காலிக மண்பாலம் அடித்து செல்லப்பட்டதால் பெரிய குழாய்கள் போட்டு பாலத்தை மீண்டும் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. பேரண்டப்பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிலையை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து செல்கின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan