'கொல மாஸ்' குல்தீப்.... அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா... ஆனந்தத்தில் கோலி&கோ

share on:
Classic

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அதன் முதன் இன்னிங்ஸை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும் அதனை தக்க வைத்துக்கொள்வதில் கோட்டை விட்டது. அந்த அணியின் ஸ்கோர் 72-ஆக இருந்தபோது குவாஜா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய வீரர்களும் சீராண இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

நிதானமாக விளையாடிய ஹாரிஸ் 79 ரன்களும், மார்ஷ் 8 ரன்களும், லாபுஷான்யா 38 ரன்களும், ஹெட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டிம் பெயின் 5 ரன்கள் மட்டுமே குவித்து அவுட் ஆனார். இன்றைய 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. இந்திய பவுலிங் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்றைய நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ஹான்ஸ்காம்ப் 28 ரன்களுடனும், கம்மின்ஸ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளைய 4-ஆம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா தொடரவுள்ளது. ஒருவேளை இந்த போட்டி சமனில் முடிவடையும் பட்சத்தில் 2-1 என்ற வெற்றிக்கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கான சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar