ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்த ’சைனா மேன்' ..!

share on:
Classic

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 300 ரன்களில் ஆட்டமிழந்து ஃபாலோஆன் பெற்றது. 

சிட்னியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஆட்டத்தின் 4-வது நாளான இன்றும், மழை நீடித்ததால் ஆட்டத்தின் முதல் செஷன் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்று, ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்திரேலியாவின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டினர். குறிப்பாக 'சைனா மேன்' குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ஆஸ்திரேலிய அணி, 300 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது.

அதிகபட்சமாக குல்தீப்யாதவ், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 322 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் விராட் கோலி ஃபாலோன் ஆன் வழங்கினார். இதனையடுத்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 4-வது நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 316 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், நாளைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை தவிர்க்க போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி சரித்திர சாதனை படைக்க கோலி படை முனைப்புடன் உள்ளது. இதனால், நாளைய ஆட்டம் ரசிகர்களியே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind