அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் : புதிய சட்டம் இயற்ற குமாரசாமி திட்டம்..!!

share on:
Classic

அரசியல் நையாண்டி என்ற பெயரில் அரசியல் தலைவர்களை இழிவுப்படுத்தவதால், செய்தி ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்போவதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது குறித்து சந்தேகம் எழுப்பும் ஊடகங்களை அவர் குற்றம்சாட்டினார். ராகுல்காந்தியின் நல்லாசியுடன் இந்த கூட்டணி தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ அரசியல்வாதிகளை பற்றி நீங்கள் என்ன நினைத்துள்ளீர்கள்..? கேலி செய்வதற்கு எளிதாக அரசியல் தலைவர்கள் உள்ளதாக கருதுகிறீர்கள். எங்களை கிண்டல் செய்வதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோமா..? உங்களுக்கு நாங்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல இருக்கிறோமா..? எங்களை பொதுமக்கள் மத்தியில் நீங்கள் இழிவுப்படுத்துகிறீர்கள். அதனை தடுக்க சட்டம் தேவை என்று நினைக்கிறேன்” என்று கடுமையாக சாடினார். 

மேலும் “நாங்கள் ஊடகங்களினால் உயிர் வாழவில்லை, ஏனெனில் மாநிலத்தில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். ஊடககங்களை பார்த்து எனக்கு துளி கூட பயமில்லை” என்றும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya