கும்கி யானைகளுக்கு டிமிக்கி கொடுக்கும் சின்னத்தம்பி..!!

share on:
Classic

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு தோட்டத்தில் சுற்றி வரும் சின்னதம்பி யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் விழிபிதிங்கியுள்ளனர்.

உடுமலை பகுதியில் கடந்த 9 நாட்களாக சுற்றி வரும் சின்னதம்பி யானை நேற்று முதல் கண்ணாடிபுத்தூரில் கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்து வெளியேறாமல் உள்ளது. இதனால் இன்று காலை கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை கொண்டு அமராவதி வனப்பகுதிக்குள் விரட்டும் பணி துவங்கபட்டது. கும்கி யானைகள் கரும்பு காட்டிற்குள் வருவதை அறிந்த சின்னதம்பி சின்னக்குழந்தை போல் ஓடியது. சின்னதம்பி ஓடுவதை கண்டு மிரண்ட கும்கி யானைகள் வேறு திசையில் வேகமாக ஓடின. இதனிடையே, பாகன்கள் நிறுத்த முயன்றும் கும்கி யானைகள் நிற்காமல் ஓடியதால் பதற்றம் நிலவியது. நீண்ட தூரம் சென்ற கும்கிகள் மீண்டும் வர மறுத்தன. பின்னா் கும்கி யானைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. கரும்பு தோட்டத்தில் கண்ணாம்மூச்சி விளையாடி வரும் சின்னதம்பி  வெளியில் வராமல் இருப்பதால் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்னதம்பியால் பயிரிடப்பட்டுள்ள கரும்பு முழுவதும் நாசமாகியுள்ளதாகவும் வனத்துறையினா் தங்களுக்கு  உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth