லேட்டெஸ்ட் டிரெசிங் பற்றி தெரிஞ்சுக்கனுமா? இத கவனியுங்க...

share on:
Classic

ஆண்டு முழுக்க எவ்வளவோ பண்டிகைகள் வந்தாலும் இந்த அக்டோபர் - ஜனவரி மாதங்கள்தான் எல்லாருக்குமே மிகவும் சிறப்பா பார்க்கப்படுது. ஏன்னு கேக்காதீங்க, இது குழந்தைகளுக்குக் கூட தெரிஞ்சதுதான். 

அதாங்க, நவராத்திரி, தீபாவளி, ஈஸ்டர், கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல்னு ஏகப்பட்ட கொண்டாங்கள் வந்துடும். அதுக்குலா தகுந்தா மாதிரி வெரைட்டி வெரைட்டியா டிரெஸ் எடுக்க திட்டமிடும் பெண்களே இதை கொஞ்சாம் பாத்துட்டு அப்றமா துணிக்கடைக்கு போங்க..

குர்தா/குர்தி:

பொதுவாகவே எல்லாரும் சல்வார் கமிஸ் பக்கம் போகும்போது தனித்துவமா தெரியனும்னா எத்னிக் குர்திஸ்க்கு போங்க. அது பெண்களுக்கு மட்டுமில்ல குழந்தைகளுக்கும் எடுப்பாகவும் அழகாகவும் இருக்கும். அப்போ, நாங்க மட்டும் என்ன இளைச்சவங்களானு அதிருப்தி தெரிவிக்கும் ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் குர்தானு ஒரு செக்‌ஷன் இருக்கு கவலைப்படாதீங்க..

வகைகள்:

சைடு ஸ்லிட், மல்டி ஸ்லிட், முன்பக்கம் ஸ்லிட் உள்ளது என பல வெரைட்டிகளில் குர்தா/குர்தி கிடைக்கின்றன. உங்க நிறத்துக்கு ஏற்றார் போல், மேட்சிங்காக தேர்ந்தெடுங்க..

ஃப்ளோரல் ட்ரெஸ்:

வகை வகையான வண்ண பூக்கள் மற்றும் பல டெக்ஸ்ட்ஷர் டிசைனில் ஃப்ளோரல் மாடல் துணிகள் சந்தையில் உலவுகிறது. இந்த மாதிரியான ஃபோளரல் டிசைன் குர்தி/குர்தாஸ் சற்று குண்டாக உள்ளவர்களுக்கு இலகுவாகவே பொருந்தக்கூடியது.

வகைகள்:

ஃப்ளோரல் வகை துணிகளை பெரும்பாலும் டின்னர் செட்டப் போன்ற நேரத்தில் அணிந்தால் அழகாகவும் சிம்பிள் கிராண்டாகவும் இருக்கும். பண்டிகை காலத்திற்கும் ஏற்றதே. பாட்டம் மற்றும் டாப்ஸ்களில் மல்டி சாய்ஸ் டைப்பில் அணியலாம்.

லாங் குர்தி:

லாங் குர்தீஸ் பெண்களுக்கு மட்டுமே சிறப்பாக பொருந்தக்கூடியது. ஏனெனில், குள்ளமாக உள்ளவர்களுக்கும், உயரமாக உள்ளவர்களுக்கு இம்மாதிரியான கனுக்கால் நீளமுள்ள ட்ரெஸ்கள் மிகவும் கச்சிதம். இதில் ஃப்ளோரல் டிசைன் வகையாறாக்களுக்கு கூடுதல் ஸ்பெஷல். முன்பக்க ஸ்லிப் கொண்ட டாப்ஸும், ஒரு டெனிமும் அணிந்தால் அந்த நாள்இன் சிம்பிள் ப்யூட்டியே நீங்கதான்.

News Counter: 
100
Loading...

janani