மேக்கப் கலைஞரானார் குஷ்புவின் மகள்..!

share on:
Classic

நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக அலங்காரம் செய்யும் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். 

இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவுக்கு அனந்திதா, அவந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.  இரண்டாவது மகளான அனந்திதா, அன்மோல் என்ற முக அலங்காரம் செய்யும் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர் முக அலங்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ஆடை வழங்கும்  திட்டத்தை அனந்திதா துவக்கி வைத்தர். இந்நிகழ்ச்சியில் கலந்து குஷ்பு கலந்து கொண்டார். 

பின்னர், தனது மகளின் நிறுவனம் குறித்து பேசிய குஷ்பு, என் மகள் தனக்கு பிடித்த விஷயத்தை செய்கிறாள். அவளுக்கு நான் உதவுகிறேன். அவள் மேக்கப் கலைஞராக வர வேண்டும் என ஆசைப்பட்டு இப்போது அதற்காக ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளார். எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind