பிரசாரத்தின் போது இளைஞரின் கன்னத்தில் அறைந்த குஷ்பு..!!

share on:
Classic

காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு பெங்களூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் சில்மிஷம் செய்த நபரின் கன்னத்தில் குஷ்பு அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷாத்தை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான குஷ்பு பெங்களூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பிரசாரம் முடிந்து சாந்தி நகர் எம்.எல்.ஏ நலபாட் அஹமத்துடன் சேர்ந்து வாகனத்தில் ஏறுவதற்காக குஷ்பு சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சில்மிசம் செய்ததால் குஷ்பு அந்த நபரின் கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan