யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்பட 3 வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம்..!

share on:
Classic

விதிமுறைகளை மீறியதற்காக, தனியார் வங்கிகளான கர்நாடக வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி, நிதி நிறுவனங்களின் அனைத்து சர்வதேச பணப்பரிவர்த்தனைகளும் ஸ்விப்ட் என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த ஸ்விப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 14,000 கோடி நிதி மோசடி செய்துள்ளதாக சமீபத்தில் தெரியவந்தது. அதையடுத்து, அந்த மென்பொருளை சரிவர பயன்படுத்தாத தேனா வங்கிக்கு (Dhena Bank) ரூ. 2 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் ஐடிபிஐ (IDBI) ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ. 1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது, சர்வதேச வங்கிப் பணப்பரிவர்த்தனைகளுக்கு தேவையான மென்பொருளை முறையாக பயன்படுத்தாத காரணத்தால் கர்நாடக வங்கிக்கு (Karnataka Bank) ரூ. 4 கோடியும், கரூர் வைஸ்யா வங்கிக்கு (KVB) ரூ. 1 கோடியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (Union Bank of India) ரூ. 3 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan