தலைக்கவசம் அணிந்தால் லட்டு..! காவல்துறையின் வித்தியாசமான விழிப்புணர்வு..!

share on:
Classic

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு லட்டு வழங்கி காவல்துறையினர் வித்தியாசமான விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்கள், தலைக்கவசம் அணியாமல் இருகச்கர வானத்தில் வந்த, 10 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அணியாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் எடுத்துக் கூறினார். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அவர் லட்டுகளை வழங்கி பாராட்டினார். இறுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் லட்டுகளை வழங்கிய அவர், அடுத்தமுறை வாகனத்தை எடுக்கும் போது தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கி வேண்டும் என வலியுறுத்தினார்.

News Counter: 
100
Loading...

Ragavan